சென்னை: தமிழகத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதை கண்டு கொள்ளாத தெற்கு ரயில்வே ஏப்ரல் 10ந்தேதி முதல் கூடுதலாக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக   அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக முடக்கப்பட்ட ரயில்சேவை, பின்னர் தளர்வுகள் அடிப்படையில் மீண்டும் சிறப்பு ரயில்களாக நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியமானது.  இதனால், முன்பதிவு செய்தவர்கள் அவசரம் காரணமாக பயணம் செய்ய முடியாத நிலை நீடித்து வருஐகிறது. இதனால் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள்   தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத தெற்கு ரயில், கூடுதலாக மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி,

1. தாம்பரம் – நாகர்கோவில் இடையே ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி முதல் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கம்.

2. அரக்கோணம் – ஜோலார்பேட்டை (தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்) ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இயக்கம்.

3.புதுச்சேரி – கன்னியாகுமரி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் இயக்கம்

4.புதுச்சேரி – மங்களூரு வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் இயக்கம்

5. கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் ஒருமுறை விரைவு ரயில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் இயக்கம்.

6.மதுரை – சென்னை எழும்பூர் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது

7. மதுரை – ஹஷ்ரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இயக்கம்

8. கோவை – பெங்களூரு வாரம் 6 நாட்கள் விரைவு ரயில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இயக்கம்

9. கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் 6 நாட்கள் சதாப்தி ரயில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இயக்கம்

10. சென்னை சென்ட்ரல் – ஹஷ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத் வாரம் ஒருமுறை ரயில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இயக்கம்.

இவ்வாறு ரயில்வே அறிவித்துள்ளது.