சென்னை:

மிழகஅரசின் வேண்டுகோளை ஏற்று, நாங்கள் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வருவதாக தெரிவித்தும், எங்களை  அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை என்று டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீனில் ஜமாத் மாநாடு மாறி உள்ளது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் பல ஆயிரத்தக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் இரந்து 1131 பேர் கலந்து கொண்டனர். அதில் 515 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 616 பேர் தாமாக முன்வந்து மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று தெரிவித்திருந்தார். தமிழக முதல்வரும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில்  நடைபெற்ற  தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மதபோதனை கூட்டத்தில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த சிலர், தாங்கள் சோதனைக்கு தயாராக இருப்பதாக அரசின் அவசர தொலைபேசி எண்ணிக்கு தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும், ஆனால், எங்களை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரும் என்று கூறப்பட்டது.

ஆனால், சுமார் 2 மணி நேரம் நாங்கள் காத்திருந்தும் எங்களை அழைத்துச்செல்ல ஆம்புலன்சோ, எங்களிடம் சோதனை மேற்கொள்ளவோ யாரும் வரவில்லை  என்று அரசு மீது குற்றம் சாட்டி உள்ளனர்.