சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கோரிக்கை வரவில்லை என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு குறித்து,  இன்று மாலை ஆளுநருக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில்  234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு,   வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டுவிட்டது. எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கோரிக்கை வரவில்லை. தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை அனுப்ப உள்ளோம்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக எம்.பி.க்கள்  கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக துணைஒருங்கிணைப்பாளர்ன வைத்தியலிங்கமும், வேப்பனஹள்ளியில் கே.பி.முனுசாமியில் போட்டியிட்டனர். அவர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாவர்,அந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்.

மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் எம்எல்ஏ க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.