டில்லி:
யில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் இனிமேல் கிடையாது. இதற்கான முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.
budjet
அடுத்து வரும் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்துத் தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது. தலைநகர் டில்லியில் இன்று நடைபெற்ற  பிரதமர்  தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொது பட்ஜெட்டை முன்னதாகவே தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதன் மூலம், 2017 – 18ம் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டும் இணைத்து தாக்கல் செய்யப்படும். அதோடு, பொது பட்ஜெட் முன்னதாகவே தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் நடப்பு நிதியாண்டு வரை சுமார் 90 ஆண்டு காலத்துக்கும் மேலாக ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. சுமார்  90 ஆண்டு காலமாக இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. முன்பு தனித்தனி அமைச்சர்களால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இனிமேல் நிதி அமைச்சர் பொதுபட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டையும் தாக்கல் செய்வார்.
இரண்டு பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்படுவதால் மத்திய அரசுக்கு  நிதிச்செலவு அதிகமாக செலவாகிறது. எனவே, செலவை குறைத்து, பணத்தை மிச்சப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.