சென்னை:
சென்னை பரங்கி மலை முதல் ஏர்போட் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் முடிவுற்றதால் இன்று முதல் ரெயில் சேவை தொடங்கியது
jeya1
தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து  இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில்  மத்திய அமைச்சர்கள் வெங்கையாநாயுடு மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
cmrl3
சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரை இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளை முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார். அதற்குரிய ரெயில் நிலையங்களை யும் முதல்வர் திறந்து வைத்தார்.
 முதல்வர் ஜெ பேசியதாவது: 
சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்போது சுமார் 20 கி.மீ., தூரத்திற்கு வழங்கப்பட உள்ளது. சென்னையை நவீன நகரமாக்கும் எனது முயற்சியின் ஒரு அங்கமாக மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.  மெட்ரோ ரயில்சேவை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முழு அளவில் ஒத்துழைத்து வருகிறது.
கடந்த 2003ல் நான் முதல்வராக இருந்த போது தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழு அறிக்கை தயார் செய்யப்பட்டது.
தமிழகத்தின் மேம்பாட்டிற்காக பொன்ராதாகிருஷ்ணன் உழைத்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கு ஜப்பான் உதவி வருவதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனக்கூறினார்.
cmrl1
 
 மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
சென்னையின் இரண்டாவது மெட்ரோ ரயில் வழித்தட துவக்க விழாவில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.  இந்த மெட்ரோ ரயில் சேவையால் சென்னை நகர மக்கள் மிகுந்த பயனடைவர் என்றார்.
இந்த சேவையை முதல்வர் துவக்கி வைப்பது பெருமைக்குரியது என்ற மத்திய அமைச்சர், மெட்ரோ ரயில் சேவையால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார்.
cmrl1
இந்த வழித்தடம் சென்னை விமான நிலையத்தை இணைக்கும் முக்கியமான வழித்தடம் என்று குறிப்பிட்ட வெங்கய்ய நாயுடு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
தமிழக மக்கள் பயன் பெறும் வகையில் விரைவில் ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறும் என குறிப்பிட்டார்.
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதும், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள்  மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.  மெட்ரோ ரயிலில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை மற்றும் அதிகாரிகள் பயணம் செய்தனர்.
இந்த மெட்ரோ ரயிலை இரண்டு பெண் ஓட்டுநர்கள் இயக்கினர். அம்சவள்ளி, நளினி ஆகியோர் மெட்ரோ ரயிலை இயக்கினர். கடந்த முறை கோயம்பேடு – ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயிலை பிரீத்தி என்பவர் இயக்கினார்.