சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், விலை உயராது என மத்திய அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில், விலை உயர வாய்ப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனிடையே மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று (ஏப்.,29) நடைபெற உள்ளது. இத்துடன் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்து, மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தல் முடிவடைந்ததும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என மீண்டும் வதந்தி பரவியது. இதனால், ஆந்திராவில் பல பெட்ரோல் பங்க்களை வாகனங்கள் முற்றுகையிட்டன. பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் விற்றுத் தீர்ந்தன. இது மக்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சுஜாதா ஷர்மா, பல இடங்களில் மக்கள் பீதியடைந்து எரிபொருள் வாங்குவதை பார்க்கிறோம். மாநில அரசுகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து விற்பனை நிலையங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எரிபொருள் இருப்பு உறுதி செய்யும் வகையில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எங்கும் பற்றாக்குறை ஏற்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எந்த திட்டமும் இல்லை. வதந்திகளை யாரும்நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். பீதியடைந்து எரிபொருள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
[youtube-feed feed=1]