முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 10 சொத்துகளை அமலாக்கத்துறை (ED) தற்காலிகமாக முடக்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு 2013-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்குடன் தொடர்புடையது.

தயாநிதி அழகிரியின் சார்பில் அவரது தந்தை மு.க.அழகிரி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “என் மகன் அறிவுசார் குறைபாடு மற்றும் பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி அளிக்கும் உடல்நிலை அவருக்கு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சித்தார்த்தன் நோட்டீஸ் பெற்றுக்கொண்டார்.
மேலும், மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[youtube-feed feed=1]