சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி மதுபான கடைகள், பார்களை திறந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 1ந்தேதி தொழிலாளர் தினம் மற்றும் மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை ஆகிய இரு நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி, பல நூறு கோடிகளை வாரி குவித்து வந்த டாஸ்மாக் நிர்வாகம், வாக்கு எண்ணிக்கை அன்றும், தொழிலாளர் தினம் அன்றும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 01.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25ll(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 01.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் நடவடிக்கை விற்பனை விதிகளின்படி கடுமையான எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதோ போல மே 4ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நடைபெறவுள்ளது. எனவே மே 4 ஆம் தேதியும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்குப்பதிவையொட்டி ஏப்ரல் 21,22,23 ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]