மும்பை: மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவார் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்று,  ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டு வருகிறது, அவரது வழக்கறிஞர் சாடியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன். மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக இருந்து வருகிறார். இவர்மீது ஏற்கனவே ஊழல் புகார் நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டவை என்று வருமான வரித்துறை குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக ஊடகங்களும் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அஜித்பவாரின் வழக்கறிஞர், , அஜித் பவாரின் சொத்துக்கள் எதுவும் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளடன்,  முடக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் முறையாக வருமான வரியை செலுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  அஜீத் பவார் சொத்துக்கள் குறித்தும், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டது குறித்தும் ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிடுவ தாக குற்றம் சாட்டியவர்  அதில் எந்த உண்மையும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளதுடன், ஊடகங்களின் பொய் பிரசாரங்களுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் எனவும்  காட்டமாக தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் கைதைத் தொடர்ந்து, துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ1000 கோடி சொத்துகள் பறிமுதல்…