சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணியோ, எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனித்தே போட்டியிடுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு என்று அறிவித்திருந்த நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு கிடையாது என விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில்,  தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் “தளபதி” அவர்களின் உத்தரவின்படி ” தளபதி விஜய் மக்கள் இயக்கம்” எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. எனவே “தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்” சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்களும் , ஒன்றிய நகர , பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் , ரசிகர்களும் முழுமூச்சுடன்  பிரசாரம் செய்து “தளபதி ” மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.