Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இனி முன்ஜாமீன் கிடையாது! நீதிபதி கறார்..

Sep 2, 2020

சென்னை: மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் சிக்குபவர்களுக்கு, இனி முன்ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மணல்கொள்ளை அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசே மணல் விற்பனையை நடத்தினாலும், முறைகேடாக மணல்கொள்ளை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், மணல் கடத்தல் வழக்கில் சிக்குபவர்கள், ஜாமின் கோரினால், குறிப்பிட்ட  அளவிலான தொகை  மாவட்ட நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப் பட்டு உள்ளது. ஆனாலும், மணல் கடத்தல், மணல் கொள்ளை குறைந்தபாடில்லை.

இந்த  நிலையில் மணல்கொள்ளை வழக்கு தொடர்பனா விசாரணை,  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 15 பேர் முன்ன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்தநீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைக்கிறது. அதனால் மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கனிம வளமே  இல்லாமல் போய் விடும். குடிதண்ணீருக்கு அடுத்த தலைமுறையினர் திண்டாட வேண்டியது வரும் என்று கூறினார்.

மேலும், இதுபோன்ற வழக்குகளில்,  முன்ஜாமீன் நிபந்தனையாக ரூ.25 ஆயிரம் விதித்தால், அதை செலுத்த இவர்களைப்போன்ற மணல் கடத்தல் கும்பல் தயங்குவதில்லை. அத்துடன், சிறைக்குள் போகாமல் முன்ஜாமீன் கிடைப்பதால் பலர் தைரியமாக கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும், மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோர்  சில காலம் சிறையில் இருந்தால் தான் பயம் வரும். கடத்தல் குறையும். இயற்கை பாதுகாக்கப்படும்” என்று கருத்து தெரிவித்தார்.

Post navigation

சென்னையில் 4,648 ரவுடிகள்… களையெடுக்குமா காவல்துறை!
7ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! எடப்பாடி  பழனிசாமி அறிவிப்பு

Related Post

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer