தஞ்சாவூர்: 
மிழக பள்ளி மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணம் இல்லை என்று மேரி சபையின் பிரான்சிஸ்கன் சகோதரிகளின் சுப்பீரியர் ஜெனரல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைக்கேல்பட்டியில் இருக்கும் அந்த பள்ளியில் +2 படித்துக்கொண்டு இருந்த மாணவி ஹாஸ்டல் வார்டன் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால் தான் மனம் உடைந்ததாகவும், தனக்கு தொடர்ந்து வார்டன் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு அவர் தினமும் பல விதங்களில் அழுத்தம் கொடுத்ததாகவும் அந்த மாணவி வாக்குமூலத்தில் கூறி உள்ளார். தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தால் வேறு வழியின்றி பூச்சி மருந்தை குடித்ததாகவும் அந்த மாணவி மரணம் அடையும் முன் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வழக்கில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வார்டன் சகாயமேரியை (62) போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி பூச்சி மருந்தை குடித்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு உடல்நிலை மோசமான நிலையில் நேற்று முதல்நாள் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழக பள்ளி மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் இல்லை என்று மேரி சபையின் பிரான்சிஸ்கன் சகோதரிகளின் சுப்பீரியர் ஜெனரல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தஞ்சாவூரில் உள்ள 160 ஆண்டுகள் பழமையான பள்ளி உட்பட எங்கள் நிறுவனங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. பள்ளி மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணம் இல்லை  என்றும் அவர் கூறினார்.