திருநெல்வேலி: நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக  மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திமுக மேயர்மீதே திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுக்களை கூறி நம்பிக்கை இல்லா தீர்மானம் வரை கொண்டு வந்த நிலையில், முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு, அதிருப்தி கவுன்சிலர்கள் வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று டு சிறை வைத்துக்கொண்டு, ,   மேயருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் தொடர்பான கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளவிடாமல், ஆணையாளரைக் கொண்டு, தீர்மானம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியின் திமுக மேயர் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால், மாநகராசியின் 44 கவுன்சிலர்கள்,  மேயர் சரவணனுக்கு எதிராக  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மொத்தமுள்ள 5 கவுன்சிலர்களில் 45 கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியதால், மேயர் பதவி இழப்பது உறுதியாது. இதையடுத்து,  இன்று மேயர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என மாநகராட்சி ஆணையர்  தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவித்திருந்தார். இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆளும்கட்சி மேயருக்கு எதிராக ஆளும்கட்சியைன  திமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து, இதை தடுக்க அமைச்சர் தங்கம் தென்னரசுவை களமிறக்கிய திமுக தலைமை, அதிருப்தி கவுன்சிலர்களை சந்தித்து பேசியது. இதந்த நிலையில், நேற்று முதல் அதிருப்தி கவுன்சிலர்களை விருதுநகருக்கு வரவழைத்து, அவர்கள் இன்றைய மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாதபடி,  அங்குள்ள சொகுசு விடுதிகளில் சிறை வைக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

இந்த நிலையில்,   இன்று காலை 11 மணிக்கு அறிவித்தபடி, மாமன்றம் கூடியது.  தீமாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குச் சென்றார். அதேநேரம், தற்போது வரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு கவுன்சிலர்கள் கூட இங்கு வரவில்லை.  எதிர்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரில், ஒருவர் கூட  வாக்கெடுப்பிற்கு வரவில்லை.  இதனால்,   மேயர்மீதா நம்பிக்கையில்லா தீர்மானம்  கைவிடப்பட்டு விட்டதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்னும் ஓராண்டுக்கு மேயர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானம்  காரணமாக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில்  பலநூறு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

நெல்லை திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்! நாளை வாக்கெடுப்பு…