நெட்டிசன்
Iyachamy Murugan பதிவு…
ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பை வேகமாக முடிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு பயனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்கள் – ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு

தற்போது ஒரு பணியிடத்திற்கு 2.5 நபர்கள் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுளனர். அதாவது சான்றிதழ் சரிபார்ப்புக்கான பரிசீலனை மண்டலத்தை அடைந்தவர்கள் (Reached the zone of consideration for Onscreen Certificate Verification ) தாங்கள் ஏற்கன்வே முதன்மைத் தேர்வெழுதும் போது பதிவேற்றம் செய்த சான்றிதழ்களை பரிசீலனை செய்வார்கள்.

அப்போது ஏதேனும் சான்றிதழ் தேவைப்பட்டால் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ( உதாரணம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் விடுபட்டிருந்தால்) அதை ஈ சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் 15 நாள் கால அவகாசம் தரப்படும். இதன் பின்னர் குருப் 2 நேர்காணல் பணியிடங்களுக்கான கலந்தாய்வு முடிந்தபின்னர். யாரெல்லாம் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பரிசீலனை மண்டலத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் தாங்கள் பெற்ற மதிப்பெண் மட்டும் தரவரிசைப் பட்டியல் தெரியப்படுத்தப்படும்.

இந்த நிலையில் தரவரிசையை அடிப்படையாக வைத்து பணி வாய்ப்பு உறுதியாக கிடைக்குமா? இல்லையா? என்பதை தெளிவாகக் கூறமுடியும்.

கூடுமானவரை நேர்கானல் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் , நேர்கானலுக்கான கலந்தாய்வு பிப்ரவரி மாதத்தின் 3 வது வாரத்திலும் இருக்கும். எனவே பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தான் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பரிசீலனை மண்டலத்தை அடைந்தவர்கள் (Reached the zone of consideration for Onscreen Certificate Verification) தங்களுக்கான பணிவாய்ப்பு என்ன என்பதை துல்லியமாக அறிய முடியும்.

51 ஆயிரம் நபர்களில் 36 ஆயிரம் நபர்கள் அடுத்த வேலையைப் பார்க்கலாம். மீதம் இருக்ககூடியவர்கள் பிப்ரவரி மாத இறுதி வரை அழுத்தத்தில் இருக்கக் கூடும். டி என் பி எஸ் சி கனிவு கூர்ந்து இதை வேகமாக முடித்தால் நன்றாக இருக்கும்.