டில்லி:

கில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ள ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை  விமர்சித்த,  நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதற்கு, பதில் அனுப்பி உள்ள ராஜீவ் குமார், தனக்கு, விளக்கம் அளிக்க  ஏப்ரல்5ந்தேதி வரை  கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு, குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தின் கீழ்  மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த 25ந்தேதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மத்திய அரசின் கைப்பாவை யாக திகபம்,  ‘நிதி ஆயோக்’  துணைத்தலைவர் ராஜீவ் குமார், இந்த திட்டத்தை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இது தேர்தல் விதி மீறிய செயல் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதில் அளித்துள்ள  நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார், தான் விளக்கம் அளிக்க,  ஏப்ரல் 5ந்தேதி வரை அவகாசம் கேட்டு பதில் அளித்துள்ளார்.