புதுடெல்லி:

பிரதமர் மோடியின் மிஷன் சக்தி உரையை படம்பிடித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி, தேர்தல் நன்னடத்தை விதியின் காரணமாக லோகோவை பயன்படுத்தவில்லை.


தி பிரிண்ட் இணையம் வெளியிட்ட செய்தியில், தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தபின், தேர்தல் பிரச்சாரம் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு பகிர்ந்து வாய்ப்பு அளிக்கு நடைமுறையை தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவை பின்பற்றி வருகின்றன.

பிரதமரின் உரையை ஒளிபரப்ப தூர்தர்ஷனும், ஆல் இந்திய ரேடியோவும் இல்லாமல் ஒளி, ஒலி பரப்ப இந்திய தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.

எனினும், பிரதமரின் உரையை தூதர்தர்ஷன் படம்பிடித்து, தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி ஒளிபரப்பியுள்ளது. அகில இந்திய வானொலியிலும் ஒலிபரப்பியுள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசின் ஊடகத்தை சாதனை பற்றி பேச குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கக் கூடாது என தேர்தல் நன்னடத்தை விதியில் கூறப்பட்டுள்ளது.

பிரதமரின் உரை தொடர்பான விவகாரத்தில் அரசு ஊடகங்கள் ஈடுபடவில்லை என்றும், யூட்யூப்பில் வெளியானதாகவும் உயர் அரசு அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.

இது பொய் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் பிரதமர் மோடியின் உரையை அரசு ஊடகம் வெளியிட்டது, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

பிரதமர் மோடி உரையை ஒளிபரப்புமாறு தூர்தர்ஷனுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை தவிர்க்கவே தூர்தர்ஷன் தனது லோகோவை தவிர்த்துவிட்டு ஒளிபரப்பியுள்ளது.

இவ்வாறு தி பிரிண்ட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.