மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கல பிரபாகர், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க. அரசு மெத்தனம் காட்டுவதாக பேசி ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தினார்.

நாட்டில் அரங்கேறிவரும் சம்பவங்களை விமர்சித்து ஒவ்வொரு வாரமும் தனது யூ-டியூப் சேனலில் சாடி வரும் இவர், இந்த வாரம் பா.ஜ.க. அரசை குறைகூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரக்கல பிரபாகர்

புதிய இந்தியாவை உருவாக்குவதாகக் கூறிக்கொண்டு அரசு செய்யும் அபத்தங்களை சாடிய அவர்.

ஜாலியன்வாலாபாக் நினைவிடத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மதத்தின் பெயரால் மக்களை பிரித்து ஆள்வதாகவும், சிறுபான்மை சமூகத்தினர் தாக்கப்படுவதற்கு இவர்களின் தூண்டுதல்களே காரணம் என்றும் குறை கூறினார்.

நாட்டின் தலைநகரில் ஊர்வலமாகச் செல்லும் வன்முறை கும்பல், சிறுபான்மையினருக்கு எதிராக பகிரங்கமாக கோஷமிடுகிறது.

அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவரும், ஆண் தலைவர்களின் கைப்பாவைகளாகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் மட்டுமே உள்ளனர் என்று ஒரு சாமியார் கூறுகிறார்.

போராடும் விவசாயியின் மண்டையை பிளக்கச் சொல்கிறார் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. அதற்கு வக்காலத்து வாங்குகிறார் அம்மாநில முதல்வர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் லாரியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார்.

நாடு வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதால் இந்த சம்பவங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

75வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட போஸ்டரில் ஜவஹர்லால் நேருவின் படம் இடம்பெறாதது கூட அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

சுதந்திர அமுதம் பருகுவோம் என்று அவர் தனது மனக் குமுறல்களை வேதனையுடன் அதில் வெளிப்படுத்தியுள்ளார்.