டில்லி:

கீழமை நீதித்துறையை அகில இந்திய பணியாக மாற்றும் திட்டத்திற்கு 9 உயர்நீதிமன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2 உயர்நீதிமன்றங்கள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மாநிலங்களின் உள்ள கீழமை நீதிமன்றங்கள் நிர்வாகம் தற்போது உயர்நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிர்வாகத்தை அகில இந்திய அளவிலான தனி அமைப்புக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்ற சட்டம் மற்றும் நீதி ஆலோசனை குழு உறுப்பினர்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 24 உயர்நீதிமன்றங்களில் பெரும்பாலானவை கீழமை நீதிமன்றங்களின் கட்டுப்பாடு உயர்நீதிமன்றம் வசம் தான் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளன.

கீழமை நீதிமன்றங்களுக்கு தனி பணி நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் திட்டத்திற்கு பிரதமர் மோடி தற்போது புதிதாக அழுத்தம் கொடுத்துள்ளார். இந்த ஆலே £சனை 1960ம் ஆண்டில் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது. மும்பை, ஆந்திரா, டில்லி, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, பாட்னா, பஞ்சாப், ஹரியானா ஆகிய உயர்நீதிமன்றங்கள் இந்த திட்டத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில செயலாளர்கள் அடங்கிய குழு மட்டுமே இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அலகாபாத், சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேஷ், கேரளா, மணிப்பூர், மேகாலயா, ஒரிசா, உத்தர்காண்ட் ஆகிய உயர்நீதிமன்றங்கள் இந்த திட்டத்தில் வயது, தகுல பயிற்சி, இடஒதுக்கீடு போன்றவற்றில் சில திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.

பெரும்பாலான உயர்நீதிமன்றங்கள் கீழமை நீதிமன்றங்களின் தங்களது கட்டுப்பாட்டிலேயே நீடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளன. ஜார்கண்ட், ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்கள் இந்த திட்டம் குறித்த பரிசீலனையில் உள்ளது. அதேசமயம் கொல்கத்தா மற்றும் கவுகாத்தி உயர்நீதிமன்றங்களில் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

சமீபத்தில் கீழமை நீதிபதிகள் நியமனத்திற்கு அகில இந்திய அளவிலான நீட் தேர்வு நடத்த மத்திய அரசு ஆலோசனை வழங்கியது. தற்போது நீதிதுறையில் அடுத்த கட்ட சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.