சண்டிகர்:

ஹரியானாவில் ஆம்புலன்ஸை பா.ஜ.க தலைவர் 30 நிமிடங்கள் நிறுத்தியதால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநில பா.ஜ தலைவரின் மகன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகளை காரில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதேகட்சியின் நகராட்சி மன்ற தலைவர் ஆம்புலன்ஸை சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைத்துள்ளார். அவருடைய காரில் ஆம்புலன்ஸ் மே £தியுள்ளது. இதனால் ஆம்புலன்ஸை நிறுத்தியுள்ளார். இதன் விளைவாக நோயாளியை உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து புகார் அளித்துள்ள அருண்குமார் கூறுகையில், ‘‘என்னுடைய மாமா நவீன் குமாருக்கு ம £ரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தோம். ஆம்புலன்ஸ் சாலையில் சென்ற போது பா.ஜ. நகராட்சி மன்ற தலைவர் தர்சான் நாக்பால் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது.

இதனால், லால் பாக்தி சவுக் பகுதியில் ஆம்புலன்ஸை நிறுத்தி நாக்பால் கார் சேதம் அடைந்ததை சரிசெய்ய பணத்தை தருமாறு ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தார். சுமார் 30 நிமிடங்கள் வாதம் தொடர்ந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமத்தினால் எனது மாமா மருத்துவர்கள் பரிசோதனை செய்வதற்கு முன்பே இறந்துவிட்டார்’’ என்றார்

ஆனால் இந்த குற்றச்சாட்டை நாக்பால் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “பழைய பேருந்து நிலையம் அருகே கார் மீது ஆம்புலன்ஸ் மோதியது. சேதத்தை பார்க்க ஆம்புலன்ஸ் டிரைவர் நிறுத்தினார். அப்போது உள்ளே நோயாளி இருந்தால் உடனடியாக செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். எனக்கு எதிரான குற்ற ச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை” என்றார்.