சண்டிகர்:
மகளுக்கு தொல்லை கொடுத்த பாஜ தலைவர் மகன் மீதான நடவடிக்கையில் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் 28 வயது மகள் கடந்த இரு தினங்களுக்கும் முன் இரவில் காரில் சென்றுள்ளார். அப்போது பாஜ மூத்த தலைவரான சுபாஷ் பாரலாவின் மகன் விகாஸ் (வயது 23) மற்றும் அவரது நண்பர் ஆசிஷ் குமார் (வயது 27) ஆகியோர் மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தனர்.
சண்டிகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்ப்ட டுள்ளது.
இந்த தகவல் சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இது குறித்து அந்த அதிகாரி கூறுகையில், ‘‘ குற்றவாளிகள் மீதான குற்றங்களை குறைக்க நினைத்தால் நீதிமன்றத்தை நாடுவேன். வழக்கு விசாரணையில் நாங்கள் தலையிட மாட்டோம். அதே சமயம் குற்றவாளி தரப்பும் புலன் விசாரணையில் எவ்வித தலையீடும் இல்லாமல் இருக்க வேண்டும். காவல்துறையும், நீதிதுறையும் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும்.
காவல் துறையினருக்கு தேவைப்படும் சமயத்தில் நாங்கள் விசாரணைக்கு வருவோம். வழக்கு தொடர்பான நடவடிக்கையில் போலீசார் சமரசம் செய்துகொண்டால் அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்’’ என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அந்த பதிவில்,‘‘ எங்களது இலக்கு குற்றவாளி மீத வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் இருவரும் மேஜர். குற்றவாளிகள் சட்டக்கல்லூரி மாணவர்கள். அவர்களுக்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் நன்றாக தெரியும். அதனால் அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்கள் செய்த குற்றத்திற்காக தான் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எங்களது நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் பின் வாங்க போவதில்லை. எத்தகைய அழுத்தம் வந்தாலும் இதில் உறுதியாக இருப்போம்.
குற்றவாளிகளின் குடும்பத்தினரை நாங்கள் குறை சொல்லவில்லை. எதிர்பாராதவிதமாக அவர்களது கு டும்பத்தினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பாக முடியாது. இதில் உரிய நீதி கிடைக்க வில்லை என்றால் சமூகத்தில், நாட்டின், அரசின் நடைமுறையில் தவறு உள்ளது என்று அர்த்தம். இந்த பிரச்னை மூலம் ஒரு பெண்ணை தனியாக வாழவும், சமமான குடிமகனாக நடத்தவும் இந்த நாடு அனுமதிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.