செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ படத்தின்  டீசர் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம்`என்ஜிகே’.  இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். அரசியல் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன்  சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு  யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளளார். படத்தின் பாடல்களும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.  இந்த நிலையில்  `என்ஜிகே’ படத்தின் டீசர் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.