தேர்தலில் போட்டியிடுவேன்: பெண்கள் கட்சி தலைவியான ‘தாடி பாலாஜி’ மனைவி நித்யா அதிரடி

Must read

சென்னை:

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவியும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவரு மான நித்யா, சமீபத்தில் பெண்கள் கட்சி ஒன்றிற்கு தமிழக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள் ளார்.  அதைத்தொடர்ந்து  தேர்தலில் போட்டியிடுவேன் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.

காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களுக்கு  போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த  ஆண்டு தனியார் தொலைக்ககாட்சியில் நடைபெற்ற பிக்பாஸ்2  நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டு, அங்கேயும் சண்டை போட்டுக்கொண்டு பார்வையாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சமூக பணிகளில் தீவிரம் காட்டி வந்த நித்யா, கடந்த வாரம்  மும்பையில் தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியில் இணைந்தார். அதையடுத்து அவர்  தமிழக கிளையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பெண்கள் கட்சியின் தமிழக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நித்யா செய்தியாளர்களிடம் பேசியபோது , இன்றளவும் பெண்கள்  அரசியலுக்கு வர  பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போதைய அரசியல்  பெண்களுக்கு ஏற்றது இல்லை. ஆனால், அதை  சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, அதை சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேசிய பெண்கள் கட்சியில் இணைந்தேன் என்று கூறினார்.

எங்களது கட்சி நாடாளுமன்ற தேர்தலின்போது 50 சதவிகித இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறிய நித்யா, கண்டிப்பாக நான் தேர்தலில் நிற்பேன் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

More articles

Latest article