செல்வராகவனின் இயக்கத்தில் , சூர்யா நடிப்பில் , .யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள படம் என் ஜி கே.

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி , ரகுல் ப்ரீத் சிங் இருவரும் நடிக்கின்றனர்

யு சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இந்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.