பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் படம் கோமாளி.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாஷி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் தினமும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மற்றுமொரு போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பள்ளி சிறுவனாக ஜெயம் ரவி வரும் இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.