சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கான   புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடங்கி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக பெண்களில் தகுதி உடையோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையை திமுக அரசு வழங்கி வருகிறது. பல்வேறு கட்டமாக பயனாளர்கள் அதிகரித்த போதும் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேர் மட்டுமே பயனாளர்களாக உள்ளனர். இருந்தாலும்  பல பெண்களுக்கு மகளிர் உரிமை  கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது.

இது தேர்தல் பிரசாரத்தின்போதும் பல இடங்களில் எதிரொலித்தது. இருந்தாலும், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் அப்ளை செய்ய தமிழகஅரசு அறிவுறுத்தியது. இதனால், மகளிரிர் உரிமை  தொகை திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.  ஆனால், அதற்கான அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றத்தை அளித்தது. இது தேர்தலில் வாக்கு வங்கியை பாதிக்கும் என அஞ்சப்பட்டது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடங்கி உள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.  மகளிர் உரிமைத் தொகைக்கான நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டு,   அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்று தேர்தல் சமயத்தில் திமுக  கூறிய நிலையில், தற்போது நிதியமைச்சரின் அறிவிப்பு, விண்ணப்பித்த அனைவருக்கும் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  “மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்ததும் விடுபட்ட அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் கட்டாயம் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.