கமதாபாத்

ன்று பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தார்.

இன்று காலை 7 மணிக்கு மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமரை உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றார்.

அப்போது பிரதமர் மோடி வெள்ளை நிற பைஜமா, காவி நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். வரும் வழியில் அவர் மக்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்திய வண்ணம் வந்தார். மேலும் தன்னை ஓவியமாக வரைந்திருந்த ஒருவருக்கு அந்த ஓவியத்தின் கீழ் தனது கையொப்பத்தை இட்டுக் கொடுத்தார். வாக்குச்சாவடிக்கு வெளியே நின்றிருந்த சிறுமி ஒருவருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மோடி வாக்களிக்குப் பின் செய்தியாளர்களிடம்,

“இன்று மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நமது கலாச்சாரத்தில் தானம் மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்டுள்ளது. எனவே ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். வாக்கு தானம் செய்ய வேண்டும். நான் எப்போதுமே இங்கிருந்து தான் வாக்களிக்கிறேன். இத்தொகுதியில் அமித் ஷா போட்டியிடுகிறார்” 

என்று கூறி உள்ளார்.