டெல்லி: 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயணிகள் ரயிலுக்கான புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் 600 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 10,200 நிறுத்தங்களும் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரயில்வே அமைச்சகத்தின் திட்டப்படி, 360 பயணிகள் ரயில்கள் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களாக தரம் உயர்த்தப்படுகிறது. 120 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள், சூப்பர் பாஸ்ட் ரயிலாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வாரியத்தின் தலைவர் யாதவ் கூறியதாவது:  எப்போது புதிய அட்டவணை அமலுக்கு வரும் என்று என்னால் கூற முடியாது. வழக்கம்போல் ரயில் சேவை தொடங்கும் போது அமலாகும் என்று கூறினார்.