டில்லி

ன்று வெளியான நீட் தேர்வு 2020 முடிவுகளில் ஒரிசாவை சேர்ந்த சோயப் அஃப்தாப் என்னும் மாணவர் முழு மதிப்பெண் பெற்று முதலிடத்தில் வந்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த மாதம் 13 அன்று நடந்த தேர்வில்  கொரோனா பாதிப்பு அடைந்தோர் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளோர் தேர்வு எழுதவில்லை.

அவர்களுக்கான தேர்வு இந்தமாதம் 14 ஆம் தேதி நடந்தது.

இந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதில் ஒரிசாவை சேர்ந்த சோயப் அஃப்தாப் என்னும் மாணவர் முழு மதிப்பெண்ணான 720/720 பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அகில இந்திய அளவில் முதல் இடத்தை ஒரிசா மாணவர் ஒருவர் பிடித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

அத்துடன் அவர் நீட் தேர்வில் முதல் முறையாக முழு மதிப்பெண் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.