\டில்லி:
புதிய ரூ.500 நோட்டுகள் நாளை மறுநாள் முதல் புழக்கத்தில் விடப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு மற்றும் கள்ள பண நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8ம் தேதி திடீரென  அறிவித்துள்ளது. அதே நேரம், ஏற்கனவே உள்ள பணத்தை மாற்ற மாற்று வழிகளையும் அரசு அறிவித்துள்ளது.
மேலும், புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், எனவே, தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு, புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெருவித்துள்ளது.
2
அதன்படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட இடங்களில் கொடுத்து புதிய ரூ.2,000 மற்றும் ரூ.100 நோட்டுகளை பொதுமக்கள் வாங்கி வருகிறார்கள்.
வங்கிகளில் பொதுமக்களுக்கு புதிய ரூ.2,000 நோட்டுகள் மற்றும் ரூ.100 உள்ளிட்ட நோட்டுகளே வழங்கப்பட்டு வருகின்றன. புதிய ரூ.500 நோட்டுகள் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், புதிய ரூ.500 நோட்டுகள் நாளை மறுநாள் முதல் வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.