நியூயார்க்

லகில் தற்போது ஒரு மர்ம வகை தொற்று  வேகமாக பரவி வருவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனித இனம் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு வகை தொற்றினால் பாதிக்கப்படுகிறது.   பல தொற்றுக்களுக்கு மருந்துகள் உள்ளன.  சிலவற்றுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.     இந்நிலையில் ஒரு சில தொற்று அந்தந்த காலகட்டத்தில் தோன்றி  பிறகு மறைந்து மீண்டும் அதே கால கட்டத்தில்  தோன்றுவதும் உண்டு.

கடந்த மே மாதம்  புரூக்ளின் மருத்துவமனையின் சினாய் மலை மருத்துவமனை பிரிவில் ஒர் முதியவர் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் குணமடையாமல் இருந்துள்ளார்.   அவருக்கு அனைத்து வகை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன.   மிண்டும் இரத்த பரிசோதனை செய்யும் போது அவர் இரத்தத்தில் ஒரு வகை மர்மமான கிருமி தொற்று உள்ளது கண்டறியப்பட்டது.

அதை ஒட்டி அவர் சில மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.  சமீபத்தில் இந்த நோயாளி மரணம் அடைந்துள்ளார்.    இது குறித்து மருத்துவரகள் ஆராய்கையில் இது போல தொற்று ஏற்கனவே ஸ்பெயினில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.   மேலும் இது இந்தியா,  பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்துள்ளதும் கண்டறியப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்ட முதியவருக்கு இந்த தொற்று இருப்பது முதல் 90 நாட்கள் வரை எந்த சோதனையிலும் தெரியவில்லை.    கண்டிடா ஔரிஸ் (சி ஔரிஸ்) என அழைக்கப்படும் இந்த கிருமி படுக்கை, சுவர்கள், கதவுகள், திரைச்சீலைகள், போன்கள், போர்டுகள் உள்ளிட்ட எங்கும் காணப்படலாம் என கூறப்படுகிறது.    அத்துடன் இது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை உடனடியாக தாக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.