நியூயார்க்:

குறிப்பிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி 100% விதிப்பதாக இந்தியாவை மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.


கடந்த 2017-ம் ஆண்டு வரி இல்லா வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்காவிலிருந்து 5.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா இறக்குமதி செய்தது.

ஆனால், இந்த பொருட்களுக்கு இந்தியா வரி விதித்தது. இதற்கு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வரியை ரத்து செய்யாவிட்டால் இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொள்வோம் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் முறையாக இது தொடர்பாக பேசிய ட்ரம்ப், வரியின்றி அமெரிக்காவிலிருந்து பொருட்களை அனுப்பினால், இந்தியாவில் 100% வரி விதிக்கிறார்கள் என கண்டனம் தெரிவித்தார்.