கறுப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காக, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய செலவுக்காக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பணத்தட்டுப்பாடும் தற்போது நிலவி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மக்கள் துயரப்பட்டு வருகின்றனர்.

ஸ்வைப் மெஷினுடன் மணமக்கள்
ஸ்வைப் மெஷினுடன் மணமக்கள்

இந்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் புதுமண தம்பதியினர் ஸ்வைப் மெஷினுடன் வரவேற்பில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்களையும் நிகழ்வுகளையும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிந்து ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டுக்கு படும் அவதியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.