டில்லி:

ங்கி கணக்குடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்ட நிலையில், வரி காரணமாக  பிடித்தம் செய்யப்பட்டுள்ள பணத்தை திரும்ப பெற வேண்டுமானால், வங்கி கணக்குடன் பான் எண் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை புதிய விதியை அறிவித்து உள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் வரை சென்றும், வருமான வரி கட்டுப வர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறிய நிலையில், வருமான வரித்துறையிடம்  IT returns தாக்கல் செய்பவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவித்து உள்ளது.  அப்போது,  வருமான வரி பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படுவதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், வருமான வரி செலுத்துபவர்கள், தங்களின்  IT returns தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மீதமுள்ள பணத்தை வருமான வரித்துறையிடம் இருந்து திரும்ப பெற வேண்டுமானால், கண்டிப் பாக பான் எண் இணைக்கப்பட வேண்டும் என்று புதிய விதியை அறிவித்து உள்ளது. பான் கார்டுகளுடன் வங்கிக் கணக்குகள் இணைக்கப்படாத வரி செலுத்துவோர், பிடித்தம் செய்யப்பட்ட உபரி தொகையை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்த புதிய விதி நடப்பு வரி விதிப்பு ஆண்டுமுதல் அமல்படுத்தப்படுகிறது. பான் கார்டு இணைக்கப் படாவிட்டால் இனிமேல் வரி செலுத்தவும் முடியாது, ஐடி ரிட்டன் தாக்கல் செய்யவும் முடியும் என்று அறிவித்து உள்ளது.

தற்போதைய நிலையில், வருமான வரித்துறை, வரி தொடர்பான பணப்பரிவர்த்தனை அனைத்தும், இ-மோட் (E-Mode) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. உபரியாக பிடிக்கப்பட்டவர்களின் பணத்துக்கான காசோலைகள், ஸ்பீடு போஸ்ட் மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்டு வந்தது. இனிமேல்அவ்வாறு அனுப்பப்படாது, ஆன்லைன் மூலமே அனுப்பப்படும் என்றும், பழைய நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும்  அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரி செலுத்துவோர் உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் பான் உடன் இணைக்கப்பட வேண்டும். இணைப்பு முடிந்தால், விரைவான மற்றும் பாதுகாப்பான முறையில் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரி திருப்பிச் செலுத்துவதாக வருமான வரித் துறை உறுதியளித்துள்ளது.

மேலும், உங்கள் வங்கிக் கணக்கை பான் உடன் இணைப்பது சிக்கலான செயல் அல்ல. உங்கள் பான் அட்டையின் நகலை உங்கள் வங்கி கிளையுடன் பகிர்ந்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் பதிவுகளில் பான் இருந்தால், இருவரும் தானாக இணைக்கப்பட வேண்டும். இணைப்பு நடக்கவில்லை என்றால், ஐ-டி துறை வரி செலுத்துவோரை வங்கியை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளது.

உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க, உங்கள் வங்கி கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு, வங்கியின் பெயர் மற்றும் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்து உள்ளது.