டில்லி

க்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் புகழ்ந்துள்ளனர்.

தற்போதைய 17 ஆம் மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று  முடிவடைந்துள்ளது.    இந்த 17 ஆம் மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா இந்த கூட்டத் தொடரை நடத்தி உள்ளார்.   இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.    இந்த மசோதாக்களுக்கு மக்களவையில் பல எதிர்ப்புக்கள் கிளம்பிய போதிலும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒரு விதத்தில் ஒற்றுமையுடன் உள்ளனர்.

அது சபாநாயகர் ஓம் பிர்லா இந்த கூட்டத் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தது குறித்ததாகும்.  இவருக்கு அனைத்துக் கட்சியினரும் இந்த நடவடிக்கைக்குப் புகழாரம் சூட்டி உள்ளனர்.   மக்களவையின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மக்களவை  தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர் என கூறி உள்ளார்.  மேலும் காமன்வெல்த் நாடுகளில் மிகச் சிறந்த சபாநாயகராக ஓம் பிர்லா ஆகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் மக்களவை உறுப்பினர் பிரேமசந்திரன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மக்களவையில் பேச பிர்லா வாய்ப்பளித்தது குறித்துப்  புகழ்ந்துள்ளார்.    குறிப்பாக  முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குக் கேள்வி நேரம் மற்றும் சீரோ அவரில் பேச வாய்ப்பளித்தது குறிப்பாக எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பளித்ததற்காக ஓம் பிர்லா பாராட்டுக்குரியவர் என தெரிவித்துள்ளார்.

பாஜக உறுப்பினர் கீரீட் பிரேம்ஜிபாய், “பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளது.  தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 353 உறுப்பினர்கள் உள்ளனர்.   ஆயினும் எதிர்க்கட்சியினருடன் ஒத்துப் போய் அவையை அமைதியாக நடத்த சபாநாயகர் பெருமளவில் உதவி உள்ளார்.   குறிப்பாக எதிர்க்கட்சியினர் பலருக்கு அவர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளித்தது பாராட்டத்தக்கது” என கூறி உள்ளார்.