டில்லி:

ம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவுகளான 370, 35ஏ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனு குறித்து உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க  முடியாது என்று உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட சமூக ஆர்வலரின் மனுவையும்  உடனே விசாரிக்க மறுத்து விட்டது.

காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, தற்போது மோடி அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான தீர்மானம் மற்றும் காஷ்மீர் மாநில மறு சீரமைப்பு மசோதாக்கல் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி, இந்திய அரசியல் சட்டம் 370, 35 ஏ ஆகிய பிரிவுளை  ரத்து செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.

மத்திய அரசின் இந்த அதிரடியை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மந்திரி பரூக் அப்துல்லா கூறி இருந்தார். இந்த நிலையில், டில்லியைச் சேர்ந்த எம்.எல்.சர்மா என்பவர், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

உச்சநீதி மன்ற நீதிபதிகள்   என்.பி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது சட்டவிரோதம் என்றும், சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று உடனே விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.

ஆனால், அவரது முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  உரிய நேரத்தில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதுபோல, காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள ப கட்டுப்பாடுகளுக்கு எதிராக  சமூக ஆர்வலரான தெசின்புன்வாலா மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ‘‘காஷ்மீரில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. செல்போன், இணையதள சேவை முடக் கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும், வீட்டுக் காவலில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள ள முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபாவை விடுவிக்க வேண்டும்’’ என்று  கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவையும் உடனே விசாரிக்க முறையிடப்பட்டது. ஆனால், அதையும்  ஏற்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.