எம் எஸ் விஸ்வநாதன் மகன் ஹரிதாஸ் மறைவு :  நெட்டிசன் கண்ணீர் அஞ்சலி

Must read

எம் எஸ் விஸ்வநாதன் மகன் மறைவு :  நெட்டிசன் கண்ணீர் அஞ்சலி

மறைந்த எம் எஸ் விஸ்வநாதன் மகன் ஹரிதாஸ் விஸ்வநாதன் மறைவுக்கு நெட்டிசன் பாஸ்கர் சேஷாத்ரி முகநூலில் இரங்கல் பதிவு இட்டுள்ளார்.

அதன் தமிழாக்கம் பின் வருமாறு

ஸ்ரீ எம்.எஸ்.விஸ்வநாதனின் இளைய மகன் திரு ஹரிதாஸ் விஸ்வநாதனின் மறைவை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். நான் அவரை மண்டபங்களிலும், மன்னரின் நினைவு தினத்தை முன்னிட்டும் மன்னரின் பிறந்தநாட்களிலும் அவரது சாந்தோம் இல்லத்தில் தவறாமல் சந்திப்பேன். கொரோனாவுக்கு முன் ஒரு சந்திப்பில் நான் அவரிடம் ஓரளவு தொடர்பில் இருந்தேன்,  அதன் பின்னர் வலை அரட்டையில் இருந்துள்ளேன்.

ஹரி, உங்களை நான் மிஸ் செய்கிறேன்.  நீங்கள் மிகவும் மென்மையானவர், தென்றல் போன்ற மென்மையானவர் மற்றும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தவர். நாம் கடைசியாக ஒரு விழாவில் கட்டிப்பிடித்ததை நான் இன்னும் நினைத்துக் கொண்டு உள்ளேன்.

நீங்கள் இவ்வாறு மறைந்தது சரியா?  

ஹரிக்கு மனைவி, மகன் மற்றும் ஒரு அழகான மகள் உள்ளார். அவள் ஒரு அழகான பெண். தாத்தா விசு அவளை மிகவும் நேசித்தார். ஹரி சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து நேற்று அதிகாலையில் மரணம் அடைந்தார்.

அவர் மான்ட்ஃபோர்ட்  மற்றும் சாந்தோம் செயின்ட் பீட் பள்ளியின் பழைய மாணவர் ஆவார், பிறகு அவர் பாபுஜி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பொறியியல் பயின்றார். அவர் ஜெனட் ப்ரோக்கோய் என்பவரை  மணந்தார்.

 

More articles

Latest article