நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கம்! பயணிகள் மகிழ்ச்சி

Must read

சென்னை:

ண்டவாளம் சீரமைப்பு பணி காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள் தாம்பரத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் பழையபடி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயிலான நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், தண்டவாள பணிகள் காரணமாக,  கடந்த அக்டோபர் மாதம் 10ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்று வந்தன. சுமார் 2 மாதங்கள் இவ்வாறு இயக்கப்படும் என்றும், டிசம்பர் 7ந்தேதி முதல், மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 4வது நடைமேடை தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில்,  ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து  மூன்று நாட்களுக்கு முன்பாகவே நேற்று முதல் மீண்டும்  எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. இது தென்மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article