சென்னை:

மிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில்,  நிர்வாக பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர் களுக்கு விருப்ப ஓய்வு முறை குறித்து  அறிவித்து உள்ளது. அதன்படி இறுதியாக  டிசம்பர் 10ந்தேதிக்குள் விண்ணப்பங்கள் அளிக்கும்படி  தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் அறிவித்து உள்ளது.

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் கடந்த 29-11-2019 தேதியிட்ட அறிவிப்பாணையில்,  ஓய்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் 31-12-2019 உடன் முடிவடையும் ஆண்டிற்கு ஆய்வு செய்யப்பட வேண்டியது இருப்பதாகவும்,

01-01-1989 முதல் 31-12-1989 வரையுள்ள காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 30 ஆண்டுகள் பணி முடிந்த அலுவலர்களும் ஆய்வு செய்யப்பட  வேண்டியவர்கள் என்றும்,  இந்த தேதிக்குள்  50 வயது அல்லது முடிவடையும் அல்லது 30 ஆண்டு முடிவடைதல், நிர்வாண பணியாள்ர்கள், இதர பணியாளர்கள்   (அடிப்படை பணியாளர்களுக்கு 55 வயது) இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அவ்வலுவலர்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியவர் என்று தெரிவித்து உள்ளது.‘

எனவே, மேற்படி விவரங்களின் அடிப்படையில் உரிய அலுவலர்களின் பதிவுறுதாட்கள், அனுப்பி வைத்திட கோரப்பட்டது. எனினும், இதுநாள் வரை முகவரியில் காணும் அலுவலர்களால் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.

எனவே இனியும் காலம் தாழ்த்தாது, உரிய அலுவலர்களின் பதிவுறுதாட்களை அனுப்பி வைத்திட வேண்டும்  தெரிவிக்கப்படுகிறது. வரும் 10ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.