சென்னை,
ண்டித ஜவஹர்லால் நேருவின் 127வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 127வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில்  இன்று காலை சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது.
cong2
ரோஜாவின் ராஜா என்றும், நவீன இந்தியாவின் சிற்பி என்றும் அன்போடு அழைக்கப்பட்டவர் பண்டித ஜவர்லால் நேரு. அவரின் 127வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்களால் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது.
சென்னை சத்திய மூர்த்தி பவனில், அலங்கரிப்பட்ட  நேருவின்  திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து  பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர்  ‘பண்டித ஜவஹர்லால் நேரு கண்ட ஜனநாயக சோஷிலிசம்’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
cong-1
அதில் இலக்கிய செல்வர் திரு.குமரி அனந்தன் மற்றும் கவிக்கோ திரு.அப்துல் ரகுமான் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான  தொண்டர்கள் கலந்து கொண்டனர்.