டெல்லி: நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் இன்று பாஜக எம்.பி லல்லு சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய கல்வித்துறையின் கீழ் வரும் தேசியத் தேர்வு முகமையானது, நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை ஆலோசனையுடன் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் நீட் தேர்வானது இவ்வாண்டு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடத்தப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.