டெல்லி: நீட் தேர்வு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் ஆகஸ்டு 10வரை நீட்டித்து  தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடக்கவிருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதையடுத்து, தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி, விண்ணப்பத்திற்கான கடைசி தேதி ஆகஸ்டு 6  என அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் பிளஸ்2 தேர்வு முடிவுகள் மற்றும் மதிபெண்கள் ஜூலை 30ந்தேதிதான் வெளியானது. இதனால், விண்ணப்பம் செய்வதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, தற்போது விண்ணப்பத்திற்கான தேதியை நீட்டித்தி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,

சNEET (UG)-2021 தேர்வுக்கான பதிவு தேதியை (Registration Date) நீட்டித்தது. ஆகஸ்டு 10ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,  விண்ணப்பக் கட்டணத்தை ஆகஸ்ட் 10 (11:50 PM) வரை செலுத்தலாம் என்று அவகாசம் வழங்கியுள்ளது.

BSc (Hons) நர்சிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் உட்பட ஆர்வமுள்ள மாணவர்களும் NEET (UG)-2021-க்கு விண்ணப்பிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான வசதி ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 14 வரை (02:00 PM) திறந்திருக்கும் என்று NTA தெரிவித்துள்ளது.