திஸ்புர்: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற அசாம் வீராங்கனை லோவ்லினாவை கவுரவிக்கும் வகையில், அவரது கிராமம் சாலை உள்பட பல்வேறு வசதிகளை பெற்று புத்துயிர் பெற்றுள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்,  குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவரது தோல்விக்கு பிறகு, இந்தியாவுக்காக பதக்கம் வென்ற 2வது குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார் அசாம் மாநிலத்தைச் லோவ்லினா.   அசாமைச் சேர்ந்த பின் தங்கிய மாவட்டத்தில் இருந்து டோக்கியோ சென்றிருக்கும் 23 வயதேயான லோவ்லினா,  இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம், இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் இப்போது ஒலிம்பிக் பதக்கம் பெற்றுள்ளார்.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாராட்டுக்குள் குவிந்து வரகின்றன.

அசாம் மாநிலம் கோல்காட் மாவட்டத்தில் உள்ள பரோமுதியா கிராமத்தை சேர்ந்தவர் லாவ்லினா.  அவரின் கடந்த கால வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பது தற்போது  வெளி உலகுக்கு தெரிய வந்தது. கடுமையான வறுமைக்கு இடையிலும், தனது கனவை நிறைவேற்ற அவர் செய்து வந்த பயிற்சிதான், இன்று ஒலிம்பிக்கில் லாவ்லினாவை சாதிக்க வைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் லாவ்லினா முதல் வெற்றியை தனதாக்கிய உடனே அவரது கிராமத்தை நோக்கி ஊடகங்களில் பார்வை விழுந்தது. அவரது குடும்பத்தினரை காண ஊடகத்தினர், சமுக ஆர்வலர்கள் ஆர்வம் கொண்டனர்.   ஆனால், லாவ்லினா  கிராமத்திற்கு செல்ல சரியான பாதைகூட இல்லாத அவலத்தை கண்டவர்கள் அதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டது. சாலைஅமைக்க அந்த பகுதி மகக்ள் பலமுறை முறையிட்டும், பல ஆண்டுகளாக கண்டுகொள்ள அரசு மற்றும் அதிகாரிகள், தற்போது சாலை அமைத்துள்ளனர்.  தற்போது,  லாவ்லினாவினால் அவரது குடும்பம் மட்டுமின்றி அவரின் கிராமமும் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி செய்தவுடன் லாவ்லியாவின் வீட்டிற்கு சாலைகள் போடப்பட்டு வருகிறது. கிராமத்தின் முக்கிய பகுதியில் இருந்து லாவ்லியாவின் வீட்டிற்கு செல்லும் 3.5 கிமீ தூரம் கொண்ட சாலையினை அதிகாரிகள் நேரடியாக இருந்து சாலை போடுவதை கண்காணித்து வருகின்றனர்.  லாவ்லினா பதக்கம் வென்று வீடு திரும்பும்போது அவரை வரவேற்க  இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அந்த தொகுதி எம்.எல்.ஏ பிஸ்வாஜித் புகான், பதக்கம் வென்று வரும் லாவ்லினாவுக்கு இதை பரிசாக கொடுக்கவிருக்கிறோம் என்று கூறலாம். இந்த தொகுதியில் விளையாட்டு துறை மேம்படுத்த நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். அதற்கு முதல்வர் ஒத்துழைப்பு வழங்குவார் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் மாற்றம் குறித்து  கருத்து தெரிவித்துள்ள அந்த பகுதிமக்கள்,  “பல வருடங்களுக்குப் பிறகு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. லாவ்லினாtல், எங்களுக்க விடிவு காலம் வந்துந்துள்ளது. அவளுடைய வெற்றிக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவளுடைய வெற்றியை மக்கள் நம்புகிறார்கள் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.