சென்னை: தமிழகத்தில் நேற்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில்  203 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று   வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1 ஆயிரத்து 908 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,104 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 65 ஆயிரத்து 452 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், இன்று ஒரே நாளில், 203 பேருக்குகும்,  கோவை மாவட்டத்தில், 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 23 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து  2 ஆயிரத்து 47 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 11 ஆயிரத்து 76 ஆக அதிகரித்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, மாநில முழுவதும், 20 ஆயிரத்து 217 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் நேற்று 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத்தொடர்ந்து, இதுவரை பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிக்கை 5,38,727 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  8,322 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில்,நேற்று  138 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,28,603 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,802 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

03.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 32,30,992 பேருக்கும், 03.08.2021 அன்று 23,149 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: