டில்லி

நாளை நீட் தேர்வின் முடிவுகள் தேசிய தேவு முகமை இணைய தளத்தில் வெளியாகிறது

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நீட் தேர்வு அவசியம் என அறிவித்துள்ளது. அதை ஒட்டி நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம் பி பி எஸ், பி டி எஸ் கல்விக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது.

தேசிய தேர்வு முகமை இந்த நீட் தேர்வை நடத்தி வருகிறது.

இந்த வருடத்துக்கான மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்காக சென்ற மே மாதம் 5 மற்றும் 20 தேதிகளில் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் வரிசைப்படி மருத்துவ கல்விக்கான இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

இந்நிலையில்  நாளை அதாவது புதன் கிழமை அன்று நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணையத்தில் சென்று தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.