‘நீட்’: தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு! மத்தியஅமைச்சர் நிர்மலா

சென்னை,

கில இந்திய நுழைவுதேர்வான நீட் தேர்வில் இருந்து இந்த ஒரு ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு உதவி செய்யும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நீர் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டும்,  ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என்றும், ஆனால் நிரந்தர விலக்களிக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து ஓராண்டுக்கு வேண்டுமானாலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.

இதற்காக,  கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்று கூறி நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதுவும், அரசு மருத்துவக்கல்லூரி இடங்களை நிரப்ப மட்டுமே நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க முடியும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்றும் நிர்மலா சீதாராமன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சு, மருத்துவ படிப்பை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும்  தமிழக மாணவ மாணவிகளிடைய சற்று ஆறுதலை தந்துள்ளது.
English Summary
'NEET': one-year exemption for TAMILNADU ! central Minister Nirmala seetharaman