மதுரை : விமான நிலைய சுற்றுச்சுவர் கடும் மழையால் இடிந்து விழுந்தது.!

துரை

துரையில் பெய்து வரும் கடும் மழையால் விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பாதுகாப்பு அச்சுறத்தல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து தினங்களாக தென் தமிழகம் எங்கும் கடும் மழை பெய்து வருகிறது.   மதுரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   மதுரை விமான நிலையத்தில் உள்ள மழை நீர் வெளியேறும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.  அதனால் விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் நீரில் ஊறிப்போய் கீழே விழுந்து விட்டது.

சுமார் 50 அடி நீளமுள்ள இந்த சுவர் விழுந்ததில் யாருக்கும் எந்த அபாயமும் நேரவில்லை என தெரிய வருகிறது.   விமான நிலையத்தில் யாரும் நுழையாமல் இருக்க சுற்றுச்சுவர்களில் மின்வேலி போடப்பட்டிருந்தது.  தற்போது இந்த மின்வேலியும் சுவர் விழுந்ததால் அறுந்து விட்டது.   எனவே யாரும் உள்ளே நுழையாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுசுவர் அருகே நின்று, உள்ளூர் வாசிகள் விமானம் இறங்குவதையும், புறப்படுவதையும் கண்டுகளிப்பது வழக்கம்.   ஆனால் தற்போது பாதுகாப்பு காரணமாக இந்த பகுதியில் வரும் உள்ளூர் வாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.


English Summary
Compound wall fell down at Madurai Airport due to heavy rain