சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு நடப்பு தொடரிலேயே கொண்டு வரப்படும்  என  முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை சபை கூடியதும், கொடநாடு குறித்து பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி முயற்சித்தார். அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காததால், சபையில் இருந்துஅதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
 கொடநாடு விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
விவாதத்தின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்  நீட் தேர்வில் விலக்கு கோரி நடப்புக் கூட்டத்தொடரிலேயே சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும். நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்து சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என  கூறியுள்ளார்.
திமுகதேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தது.  ஆனால்,ந டப்பாண்டு அதை ரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில்,  நீட் தேர்வு ரத்து குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, ஆய்வு அறிக்கை பெற்றுள்ளது. இதைக்கொண்டு, சட்டமுன்முடிவு  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சட்ட முன்வடிவு, நடப்பு  சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.
நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கான இளநிலை மருத்துவ  நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ந்தேதி நடைபெற உள்ளது.  முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு செப்டம்பர் 11 ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…