சென்னை: அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு அனிதா பெயர் சூட்டப்பட வேண்டும்  சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ உதயநிதி கோரிக்கை வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் இன்று முதன்முறையாக  பேசிய திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின்,  திமுக ஆட்சியில்ர, நாட்டிற்கு முன் மாதிரியாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு உள்ளது,  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் உள்பட ஏராளமான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. அதுமட்டுமின்றி,  பத்து கல்லூரிகள் இந்த ஆண்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,  மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இது போன்ற மக்கள் பணியால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசியவர்,  தற்போது தமிழகத்தின்  தலையான பிரசனையாக  நீட் பிரச்சினை உள்ளது. இந்த நீட் தேர்வு காரணமாக, அனிதா தொடங்கி பல மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர், சுபஷிரி, மோதிலால், ஆதித்யா, கீர்த்தனா என 16 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த நீட் தேர்வு கலைஞர், ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வராத நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. இதற்கு முந்தைய ஆட்சியின் நிர்வாக சீர்கேடே காரணம். நீட் தேர்வு கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது, இதற்கு அதிமுகவினரும், பாஜகவினரும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து கட்சியினரும் பாதிக்கப்படுகின்றனர். அதனால்தான்,  திமுக ஆட்சியில் ராஜன் தலைமையில் குழு அமைத்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. நீட தேர்வை ரத்து செய்ய நாம் அனைவரும்  ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், நீட் தேர்வு ரத்து என்பதை  ஒரு இயக்கமாக முன்னெடுத்து சென்று அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும்,  நீட் ஒழிப்பு போராளி அனிதா பெயரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.