சென்னை: நீட் தேர்வு, வாணியம்பாடி கொலை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியாரின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு பேஜ் அணிந்து அதிமுகவினர் எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார். மேலும், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடி விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்க வெண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக முதல்வருக்கும், எடப்பாடிக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து,  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து,  ‘நீட்’ தேர்வு பிரச்சினை தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய வினாவிற்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  அளித்து பேசினார். அதன் விவரம் வருமாறு,

அதுபோல,  வாணியம்பாடி பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில் விவரம் வருமாறு