உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

World Athletics Championship 2023 ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்றிரவு நடைபெற்ற WAC-2023 இறுதிச் சுற்றில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.

WAC போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்ற சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.